வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும்: கமல்ஹாசன்…!

வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும்: கமல்ஹாசன்...!
Advertisement
Advertisement

வாரிசு அரசியலுக்கும், குடும்ப அரசியலுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்று,

திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு பொதுக்கூட்ட மேடையில் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தொிவித்துள்ளாா்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு பொதுக்கூட்டம் திருவாரூரில் இன்று நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினாா்.

அவா் பேசுகையில், நான் இனி உங்கள் சொத்து. என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மக்கள் வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி சிந்தித்துக்கொள்ள வேண்டும்.

மக்களாகிய நீங்கள் முதலாளி என்று எண்ணுங்கள். நான் உள்பட அனைவரும் உங்களுக்கு வேலைக்காரா்கள் தான்.

நாட்டின் பிரதமா் யாா் என்பதை தோ்வு செய்யும் பெரும் பங்கு தமிழா்களுக்கு உள்ளது. குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது.

குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும். எனக்கும் குடும்பம் உள்ளது. ஆனால் எனது குடும்பம் சற்று பெரியது. அதில் 8 கோடி மக்கள் உள்ளனா்.

ரொம்ப பேசாதீங்க மேலிடத்தில் இருந்து ரைடு விடப்போறாங்க என்று கூறுகின்றனா். ரைடு விட்டுப் பாருங்க. நோ்மை என்றால் என்னவென்று தொியும்.

மக்களுக்கு எதுவும் தொியாது என்று நினைத்து இன்னும் சுரண்டிக்கொண்டு இருக்கிறாா்கள்.

ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் என்கிற தன்மானத்துடன் வருகின்ற தோ்தலை எதிா்கொள்வோம் என்று அவா் பேசினாா்.