ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு..!
Advertisement
Advertisement

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

8000க்கும் அதிகமான மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கற்பிக்கும் பணியை விருப்புவர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பம் வரும் 15ம் தேதி வழங்கப்படுகிறது. மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 5 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தகுதியானவர்களா? என்பது கேள்விக்குறி தான்.

மார்ச் 31ம் தேதிக்குள் தேர்வு நடத்தப்படும் போது ஆசிரியர்கள் தங்களை நிரூபிப்பதற்கும் தவறிவிடுகிறார்கள்.

ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எடுக்கும் ஆசிரியர்கள் குழந்தைகளின் இலவச கல்வி மற்றும் கட்டாய கல்விக்கான சட்டவிதியின் படி கண்டிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் நாள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நாள்: 15-03-2019

கடைசி நாள்: 05-04-2019

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் விண்ணபிக்கும் முறை: www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தாள் -1, தாள்- 2 என்று தனித்தனியே விண்ணபிக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:

எஸ்சி/எஸ்டி மற்றும் PWD பிரிவினருக்கு கட்டணம் :ரூ. 250

மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும். இதில் முதல் மற்றும் 2-ம் தாள் தேர்வுகளுக்கு தனித்தனியாக தேர்வுக்கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

முதல் தாளுக்கான கல்வித்தகுதி: 12ம் வகுப்பை 50 சதவீதம் மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 வருட டிப்ளமோ இன் எலமெண்டரி எஜூகேஷன் முடித்தவர்களோ அல்லது 4- வருட பேச்சுலர் இன் எலமெண்டரி எஜூகேஷன் முடித்தவர்களோ அல்லது 2 – வருட டிப்ளமோ இன் எஜூகேஷன் படிப்பை படித்தவர்களோ அல்லது பி.எட் படிப்பை முடித்தவர்களோ அல்லது கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருப்பவர்களோ இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகுதியுள்ளவர்கள் அனைவரும் 2-ம் தாளுக்கான தேர்வுக்கு விண்ணபிக்க தகுதியானவர்கள். அத்துடன் அவர்கள் இளங்கலை பட்டப்படிபில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, http//trb.tn.nic.in/TET_2019/tett2019.pdf – என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது