தாஜ்மஹால் நுழைவுக்கட்டணம் உயர்வு..!

தாஜ்மஹால் நுழைவுக்கட்டணம் உயர்வு..!
Advertisement
Advertisement

உலக அதிசயங்களில் ஒன்றான உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நுழைவுக் கட்டணம் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஆக்ராவில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறை தலைவர் வசந்த் ஸ்வர்னாகர், 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹாலை காண இதுவரை ரூ.50 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மாசுபாடுகளில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக, தாஜ்மஹாலை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.250, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.1,300 செலுத்த வேண்டும்.

சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ரூ.540 க்கு பதிலாக ரூ.740 நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ரூ.50 டிக்கெட் பெறும் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதே சமயம் அவர்கள் தாஜ்மஹாலின் வெளிப்புறம் மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த கட்டண உயர்வு இன்று (டிச.,10) முதல் அமலுக்கு வருகிறது என்றார்.