ஸ்டெர்லைட் தீர்ப்பு : தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி..!

ஸ்டெர்லைட் தீர்ப்பு : தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி..!
Advertisement
Advertisement

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதால், தூத்துக்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது, என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தவறு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

இந்த தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

இனி ஸ்டெர்லைட் எங்கள் ஊரில் இயங்காது என்று சந்தோச மிகுதியில் அவர்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மூலம் நீதி கிடைத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் தமிழக அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கான நீதி கிடைத்துவிட்டது. அவர்களின் உயிர்களுக்கான தீர்ப்பு இது.

அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது என்று மக்கள் கூறி வருகிறார்கள்.

இவர் இந்த வழக்கில் வாதாடிய வைகோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமை ஆணையத்தின் தீர்ப்புக்கு

உச்சநீதிமன்றம் தடை. ஆலை மூடியே இருக்க வேண்டுமென உத்தரவு.

மிகச்சிறப்பான தீர்ப்பு சிறப்பாக வாதாடிய வைகோ அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுக்கள். எதிர்காலத்திலும் திறக்க முடியாதென உறுதி செய்யுங்கள்” என்றுள்ளார்.

அதேபோல் தூத்துக்குடியில் மக்கள் பொது இடங்களில் சுவீட் கொடுத்து கொண்டாடி வருகிறார்கள்.

தூத்துக்குடி பேருந்து நிலையம் தொடங்கி பல இடங்களில் தூத்துக்குடி போராட்ட அமைப்பினர் மக்களுக்கு சுவீட் கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள்.