தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை..!

தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை..!
Advertisement
Advertisement

தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை பேனர்கள் வைக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக சென்னையில் அனுமதியின்றி பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டதாகவும்,

சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த ஐகோர்ட், சட்ட விரோத பேனர்கள் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஒரே அளவுகோலை பின்பற்றுகின்றன.

நீதிமன்ற உத்தரவுகளை அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் மதிப்பது கிடையாது. செயல்படுத்துவதும் கிடையாது.

சாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகள், அமைப்புகள் யாரும் பேனர் வைக்கக்கூடாது.

சட்டவிரோத பேனர்கள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படும் என தமிழக அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும் எனக்கூறியதுடன்,

மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதித்ததுடன் விசாரணையை ஜன.,4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.