TNPSC தேர்வு ஒத்தி வைப்பு..!

TNPSC தேர்வு ஒத்தி வைப்பு..!
Advertisement
Advertisement

நவம்பர் 24ம் தேதி நடைப்பெற இருந்த டிஎன்பிஎஸ்சி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு டெல்டா மாவட்டங்களில் வாழும் மக்கள் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு ஒத்தி வைப்பு :
தமிழகத்தில் பெரிய இயற்கை பேரிடர் நிகழ்ந்துள்ளதால் நவம்பர் 24ம் தேதி நடைப்பெற இருந்த TNPSC புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ் நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வு நடைப்பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.