டிக்கெட் விற்பனை: பலூனில் பறந்த இளையராஜா..!

டிக்கெட் விற்பனை: பலூனில் பறந்த இளையராஜா..!
Advertisement
சென்னையில்அடுத்தமாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையைஇசையமைப்பாளர் இளையாராஜா பலூனில் பறந்தவாறே தொடங்கி வைத்தார். டிக்கெட் விற்பனை: பலூனில் பறந்த இளையராஜா..!
ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவை கவுரவிக்கும் வகையில்,
திரைப்படதயாரிப்பாளர் சங்கம் சார்பில் அடுத்த மாதம் 2 மற்றும் 3ஆகிய தேதிகளில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.
இதில் கமல்ஹசன், எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் உள்ளிட்டோர்இளையராஜவின் பாடல்களை மேடையில் பாடஉள்ளனர்.

Advertisement

இந்த நிகழ்விற்கானடிக்கெட் விற்பனை, மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் நேற்று தொடங்கியது.

அப்போதுபேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், மூன்று தலைமுறைகளைக் கடந்து இளையராஜா இசையமைத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இசை என்பது கடவுள் கொடுத்த வரம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இளையராஜா, பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை பலூனில் பறந்தவாறே தொடங்கி வைத்தார் இளையராஜா