அ.தி.மு.க வை மக்கள் மறக்க கூடாது: எஸ்.பி.வேலுமணி..!

அ.தி.மு.க வை மக்கள் மறக்க கூடாது: எஸ்.பி.வேலுமணி..!
Advertisement
கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 224 . 10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள,
குளங்களை தூர்வாரி புணரமைத்தல் ,அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்  உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  அடிக்கல் நாட்டினார்..
நிகழ்ச்சியில் கோவை சட்டமன்ற மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
50 ஆண்டு காலங்களில் இல்லாத வளர்ச்சியை கோவை நகரில் இந்த அரசு தந்து கொண்டு இருப்பதாகவும்,
சென்னையில் மெரினா பீச் இருப்பது போல, கோவை மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்தை ஏற்படுத்தும் வகையில் குளக்கரைகள் புனரமைக்கப்பட்டு,
மக்களின் பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு திட்டங்களை வழங்கிய இந்த அரசை மக்கள் என்றும் மறக்க கூடாது.எனவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ,கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு  பணிகள் நடைபெறுவது போல,
தமிழகத்தில் மற்ற பிற மாநகராட்சிகளிலும் இது போன்று பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement