சிதைக்கப்படும்… அரசு சித்தமருத்வம்…!

0
121
சிதைக்கப்படும்... அரசு சித்தமருத்வம்...!
Advertisement
Advertisement

டெங்கு, பன்றி,சிக்கன், தக்காளி,  வெங்காயம்…. என்று பெயரே புரியாத  விஷ தொற்றுக்காய்ச்சல்கள் வீரியம் காட்டும் போது மட்டும் தான்….!,

அந்த கசாயம்…. இந்த இலை சூப்பு…..! என்று நமது பாரம்பரி சித்தாவை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடும் அரசு மருத்துவத்துறை, மற்ற நேரத்தில் சித்தமருத்துவத்தை சீந்துவது இல்லை…, சித்தாவை ஒரு மாற்றான் தாய் மனப்பான்மையில் தான் நடத்துகிறது அரசு…!

காரணம், எல்லாம் ஊர் அறிந்த….. ஊழல்…., ரகசியம் தான்……! என்கிறார்கள், விபரம் அறிந்தவர்கள்.

சித்த மருந்து தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்க்களான தேன், சர்க்கரையில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து, கடைசியில் பொட்டலம் கட்டும்.. டப்பா, கவர், பேப்பர் வரை எல்லாம் ஊழல் மயம் என்றால்…?
அந்த சித்தமருந்தின் தரம் எப்படி இருக்கும்…?
அப்படித்தான் அரசு சித்தமருத்துவத் துறையும் உள்ளது…!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சித்தமருத்துவமனைகளிலும் சரியான மருந்துகளும் இல்லை, சரியான எண்ணிகையில் மருத்துவர்களும் இல்லை…! காரணம் எல்லாம் ஊழல், கட்டிங் கமிஷ்…மயம் தான்.
கக்கூஸ், பாத்ரூம், குப்பையில்,கூட கழுவி.. கல்வி.. வயிறு வளர்க்கும், லஞ்ச ஊழல் கவுரவ கமிஷன் அதிகாரிகள் இருக்கும் வரையில்,
சிறப்புமிக்க நமது சித்த மருத்துவம்… திட்டமிட்டு சிதைக்கப்படும்….!சிதைக்கப்படுகிறது.
இந்த உண்மையை உரக்க சொன்னால் அரசுக்கு கோபம் வருகிறது..!

சித்தாவை சிதைக்கும் அஸ்திவாரம்….||| அலோபதி  என்கின்ற ஆங்கில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தான் என்றால் மிகையாகாது.

  நமது அரசு பல…பல… லட்சக்கணக்கான பணங்களை வாரி கொட்டி… அல்லது வழங்கி…!?!   மக்களிடையே வியாதிகளைப் பற்றிய விழிப்புனர்வுகளை ஏற்ப்படுத்தி வருகிறது.
அதிலும்… யானைக்கு அல்வா…!. பூனைக்கு புண்ணாக்கு….. என்று எழுதிய கணக்கு வகையில்….,நல்ல சில்லரை..?!?
குத்திய காந்தி I.A.S, பரூக் I.A.S,சந்தோஷ் I.A.S, இவர்களைப்போல் சிலர் தலைமை வகித்த காலம் தான்…! அரசு சித்தமருத்துவத்துறையின் பொற்க்காலம்….!
தற்போது பல சுகாதாரமையங்களில் போதிய மருத்துவர்களும் இல்லை…, மருந்துகளும் இல்லை…!

நோய் வரும் முன் காப்பதுதான் சித்தமருத்துவம்…! ஆனால் அதை காப்பாற்ற வேண்டிய அரசு..???, ஆங்கிலமருந்துக்கு வெண்ணெய்யும், சித்தமருந்துக்கு சூனியம் வைப்பது தான் கொடுமை….!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்… போல்…! உதாரணமாக  “திரிபலா சூரனம்”

இது சகல ரோக நிவாரணிகளில் ஒன்று.
இந்த சூரனம் நோய் வருவதை தடுக்கும்…!, வந்த நோய்யையும் துரத்தும் வல்லமை கொண்டது.

இந்த சூரனம் மருந்துகடைகளில் 50கிராம் 50ரூபாய்.
இதே சூரனம் அரசுமருத்துவமனையில் இலவசம்….!

50 ரூபாய் கொடுத்து வாங்கும் “திரிபலா சூரனம்”, ஸ்டார் ஓட்டல் பெப்பர்…! (மிளகு) போல் இருக்கும்…!

அரசு தரும் ஓசி (இலவசம்) சூரனம்… கையெந்திபவன் ஆம்லெட் பெப்பர்…! தான்..!

சாக்கடை… கக்கூஸ் முதல், சவத்தை புதைக்கும் வசதி வரை அனைத்திற்குமே போராடிணால் தான் நியாயம் கிடைக்கும்… என்கின்ற ஜனநாயக நிலைப்பாட்டில்,
சிதைந்து வரும் சித்தமருத்துவத்திற்காக போராடிணால்….! தேச துரோக குற்றமாகி விடுமோ என்னவோ..?

செய்திகள்: சங்கரமூர்த்தி