எப்.ஐ.ஆரில். பெயரை நீக்க 8 லட்சம் லஞ்சம்! போலீஸ் அதிகாரி மற்றும் 3 செய்தியாளர்கள் கைது..!

எப்.ஐ.ஆரில். பெயரை நீக்க 8 லட்சம் லஞ்சம்! போலீஸ் அதிகாரி மற்றும் 3 செய்தியாளர்கள் கைது..!
Advertisement
Advertisement

காவல் ஆய்வாளர் மற்றும் மூன்று செய்தியாளர் ஒரு வழக்கிலிருந்து சிலரது பெயரை நீக்குவதற்காக,

ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள பல கால் சென்டர்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக பல்வேறு கால் சென்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 27ஆம் தேதி புஷ்பேந்திர சௌஹான் என்பவர் நொய்டா காவல்துறை கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணாவிடம் புகார் அளித்துள்ளார்.

அவர் நடத்திவரும் கால் சென்டரில் கடந்த ஆண்டு சோதனை நடந்திருக்கிறது.

இவரது புகார் மனுவில், சில செய்தியாளர்களும் ஒரு போலீஸ் அதிகாரியும் பணம் கொடுத்தால்,

தனது பெயரையும் தன் நிறுவனத்தின் ஊழியர்கள் பெயரையும் வழக்கிலிருந்து நீக்குவதாக நெருக்கடி கொடுத்துவந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதன் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை நொய்டாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் மனோஜ் பன்ட் என்ற காவல் ஆய்வாளரும் ,

சுசில் பண்டிட், ராமன் தாகூர் மற்றும் உதித் கோயல் ஆகிய மூன்று செய்தியாளர்களும் ரூ. 8 லட்சம் லஞ்சமாகப் பெற்றுள்ளனர்.

இதனை மறைந்திருந்து கவனித்த தனிப்படை போலீசார் நான்கு பேரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மனோஜ் பன்ட்க்கு நெருக்கமான ஜிதேந்திரா என்பவர் தலைமறைவாகியுள்ளார்.

இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.