வீரர் விஜயகுமார்க்கு நினைவஞ்சலி

35
546
விஜயகுமார்க்கு
விஜயகுமார்க்கு
Advertisement

இந்திய நாட்டிற்காக உயிர்த்தியாகம்

Advertisement

சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் ( DSP) திரு.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில்அசெம்பிளி லாட்ஜ் முன்பாக இந்திய நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர் வல்லராமபுரம் K.விஜயகுமார்க்கு

சங்கரன்கோவில் சுற்றுவட்டார ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர், தருணா நண்பர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் சார்பாக முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது…

இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது… மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது… மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது…

DSP திரு.ராஜேந்திரன் அவர்கள் வீரர் விஜயகுமாரின் தியாகத்தை பற்றியும், வல்லராமபுரம் ஊர் ராணுவ வீரர்களின் சிறப்புகளைப் பற்றியும், விஜயக்குமாரின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தும் எழுச்சியுரை ஆற்றினார்கள்…

ஜல்லிக்கட்டு குழு மற்றும் தருணா நண்பர்கள் சார்பாக வழக்கறிஞர் பிரபாகரன் எழுச்சியுரை ஆற்றினார்…

இறுதியில் விஜயக்குமார் குடும்பத்தினர், மற்றும் வல்லராமபுரம் ஊர்ப்பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர் S.பாண்டியன் சிவஆனந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நன்றியுரை ஆற்றினார்…

வருடாவருடம் நினைவஞ்சலியை சிறப்பாக நடத்த உறுதிமொழி ஏற்கப்பட்டது…

வீரர் விஜயக்குமார் புகழ் ஓங்குக!!!

ஜெய்ஹிந்த்!!!

மேலும் காவல் ,நீதி சமந்தப்பட்ட சுவாரசியமான செய்திகளுக்கு http://policeexpress.in/ பார்க்கவும்