சென்செக்ஸ் 350 புள்ளிகள் எழுச்சி..!

சென்செக்ஸ் 350 புள்ளிகள் எழுச்சி..!
Advertisement
Advertisement

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றமான சூழல் நேற்று நிலவியதால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று (பிப்.,27) பங்குச்சந்தைகள் மீண்டன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 256.18 புள்ளிகள் உயர்ந்து 36,226.89 ஆகவும்,

தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 70.80 புள்ளிகள் உயர்ந்து 10,906.10ஆகவும் வர்த்தகமாகின.

காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 90 புள்ளிகளுக்கு அதிகமாகவும் வர்த்தகமாகின.

வியட்நாமில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நடப்பதாலும், அதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாகவும்,

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், அந்நிய முதலீடு அதிகரிப்பு, முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் வர்த்தகமாவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.