மீண்டும் செல்பி சர்ச்சையில் சிவக்குமார்…!

0
110
மீண்டும் செல்பி சர்ச்சையில் சிவக்குமார்...!
Advertisement
Advertisement

செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டு அசால்டாக செல்கிறார் நடிகர் சிவக்குமார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார்.

அப்போது ஒரு இளைஞர் சிவக்குமாரை நேரில் பார்த்ததும் ஆசை அதிகமாகி செல்பி எடுத்து கொள்ளலாம் என்று கிட்டே நெருங்கி வந்தார்.

ஆனால் கோபமடைந்த சிவக்குமார், அந்த இளைஞரின் மொபைல் போனை கீழே தள்ளிவிட்டார். இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவியதுடன், சிவக்குமார் மீது கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து சிவக்குமார் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டதுடன் அந்த இளைஞருக்கு புதுசெல்போன் ஒன்றினையும் வாங்கி தந்தார்.

இந்நிலையில் இதேபோன்ற மற்றொரு சம்பவமும் சென்னையில் நடந்திருக்கிறது. இது சம்பந்தமான வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. அது ஒரு கல்யாண நிகழ்வு. ரோஸ் கலர் ஷர்ட், வெள்ளை பேன்ட் என வழக்கமான ஸ்மார்ட் லுக்குடன் உள்ளே நுழைகிறார் சிவக்குமார். அவரை கல்யாண வீட்டுக்காரர்கள் வரவேற்று உள்ளே அழைத்து வருகிறார்கள்

அப்போது நீல சட்டை அணிந்த ஒருவர் சிவக்குமார் வருவதை பார்த்ததும், செல்போனை எடுத்து கொண்டு செல்பி எடுக்க ஆவலாக வந்தார்.

சிரித்துகொண்டே உள்ளே நுழைந்த சிவக்குமார், இந்த நபரை எப்போது பார்த்தார் என்றே தெரியவில்லை, அசால்ட்டாக கையால் இளைஞரின் செல்போனை தட்டிவிட்டார்.

ஏற்கனவே செல்போன் விவகாரத்தில் சிவக்குமார் விளக்கம் அளிக்கும்போது “சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி செல்பி எடுப்பது நியாயமா? நானும் மனிதன்தானே?” என்று கேட்டிருந்தார்.

ஒரு வகையில் தனிமனித உரிமைப்படி சிவகுமார் கேட்ட இந்த கேள்விகள் நியாயம்தான். மறுக்க முடியாதுதான்.

அதேபோல, ஆர்வமிக்க ரசிகர்களின் ஆழமான அடித்தளத்தையும் அலசி உணர்வது அவசியமாகிறது.

மூத்த கலைஞனான சிவக்குமாரிடம் இந்த உணர்வு குறித்து கட்டாயப்படுத்த முடியாது.

ஆனால் புரிந்து கொள்ள முயற்சி செய்ய பரிசீலிக்கலாமே!! ஒரே ஒரு ஆறுதல்..

மதுரையில் படு ஆக்ரோஷமாக தட்டி விட்டார்.. சென்னையில் அது தணிந்து சாந்தமாக தட்டி விட்டுள்ளார்..