தினமும் வருகிறது சீதக்காதி..!

0
204
seethakathi-characters-will-be-introduced-one-by-one-everyday
Advertisement
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சீதக்காதிபடத்தின் கதாபாத்திரங்களின் பெயர் ஒவ்வொரு நாளும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 96 படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து வரிசையாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சாயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்பட பல படங்கள் வெளியாகயிருக்கிறது.
அடுத்த மாதம் இவரது 25ஆவது படமான சீதக்காதி வெளியாக உள்ளது. இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரமான 80 வயது நிரம்பிய பெரியவராக நடித்துள்ளார்.
இப்படத்தில், மகேந்திரன், பாரதிராஜா ஆகியோர் பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
மேலும், ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு வெளிவரும் என்று விஜய் சேதுபதியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் முதல் கதாபாத்திரமாக விஜய் சேதுபதியின் 80 வயது நிரம்பிய பெரியவரின் கதாபாத்திரமான அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் பெயர் வெளியாகியுள்ளது.