ரயில் தடம் புரண்டதால் பயணிகள் தவிப்பு..! உ.பி யில் தொடரும் சோகம்..!

41
548
ரயில் தடம் புரண்டதால் பயணிகள் தவிப்பு..! உ.பி யில் தொடரும் சோகம்..!
Advertisement

ரயில் தடம் புரண்டதால் பயணிகள் தவிப்பு..! உ.பி யில் தொடரும் சோகம்..!

Advertisement

உத்தரப்பிரதேசத்தில் அலிகார் அருகே காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதில்,

அந்த பெட்டிகளில் பயணம் செய்த  100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் அஸம்கரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில்.

அப்போது அதிகாலை 2.40 மணிக்கு அலிகார் அருகே ஆரூர்யா என்ற இடத்தில் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன.

இதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

கடந்தசில நாட்களுக்கு முன்னர்தான் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு 20 பேர் பலியாகி இருந்தனர்.

200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சம்பவத்தின் தாக்கம் மறைவதற்குள்ளாகவே இந்த விபத்து நடைபெற்றது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள்: ரோகிணி