ரஜினி தலைவர்னா… அப்போ காமராஜர், பிரபாகரன்லாம் யாரு…!

ரஜினி தலைவர்னா... அப்போ காமராஜர், பிரபாகரன்லாம் யாரு...!
Advertisement
Advertisement

சினிமாவில் நடிப்பவர் நடிகன் தான், தலைவரல்ல என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் நடைபெற்ற மிக மிக அவசரம் என்ற படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது:

ரஜினிகாந்த் தலைவர் என்றால், அப்போ பிரபாகரன், காமராஜர், கக்கன் உள்ளிட்டோர் யார் என்றும் ,

அவர்கள் என்ன சமூக விரோதிகளா, நகர்புற நக்சல்களா, இல்லை ஆன்டி இந்தியனா என்றும் கேள்வி எழுப்பினார்.

லைவர்னா யாரென தெரியாத கூட்டம் தான், திரையரங்குகளில் தலைவர்களை தேடுகின்றனர்.

இந்த கூட்டத்தை திருத்துவது கஷ்டம். தொலைக்காட்சிகளில் கூட ரஜினிகாந்த் என்று கூறுவது கிடையாது தலைவர், தலைவர்னு தான் சொல்றாங்க.

சினிமாவில் நடிப்பவன் நடிகன் தானே தவிர, தலைவரல்ல என்று கூறினார்.

சினிமாவில் கைகளை அப்டி, இப்டி ஆட்டிவிட்டால் தலைவன் அல்ல. தலைவன் என்றால் எதையும் எடுக்க, கொடுக்க தயாராக இருக்க வேண்டும்,

தூக்கத்தை தொலைத்து துன்பத்தை தாங்க வேண்டும், தழும்புகளை தாங்குபவனே தலைவன் என்றும் கூறினார்.