செல்லா நோட்டுக்கு சமுத்திரக்கனி சப்போர்ட் !

36
585
சமுத்திரக்கனி
Advertisement
Advertisement

நாடே செல்லா நோட்டை பற்றி கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்க, இதோ, சமுதாய கருத்துக்களை சினிமாவில் தூவி வரும்  சமுத்திரக்கனி யும் கிளம்பி விட்டார்.

’கள்ளநோட்டு ஒழியுமா, கறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை. இப்போதைக்கு வரவேற்போம்.

தீமை என்று தெரிந்தால் எதிர்ப்போம். அதை விடுத்து, இதை செய்வது மோடி என்கிற காரணத்தால் குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி திட்டங்களை எதிர்ப்பது சரியல்ல.

இரு கைகள் இணைந்தால் தான் ஓசை வரும். ஒரு கை தட்டினாலும் ஓசை வரும். ஆனால், கொஞ்சம் வலிக்கும்.

வலி பொறுப்போம். வலிமை பெறுவோம்’ என மோடிக்கு இப்போது சப்போர்ட் செய்திருக்கிறார் சமுத்திரக்கனி

www.tamilcheithi.com