மலேசிய பேட்மிண்டன் போட்டி சாய்னா ‘சாம்பியன்’

0
217
சாய்னா
Advertisement
Advertisement

மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட்பிரீ பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சரவாக் நகரில் நடந்தது. சாய்னா

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 67-வது இடத்தில் இருக்கும் 18 வயதான போர்ன்பவீ சோசுவோங்கை (தாய்லாந்து) எதிர்கொண்டார்.

முதல் செட்டில் தொடக்கம் முதலே முன்னிலை கண்ட போர்ன்பவீ ஒரு கட்டத்தில் 11-5 என்ற கணக்கில் வலுவான நிலையில் இருந்தார்.

பின்னர் சரிவில் இருந்து மீண்ட நேவால் 19-19 என்ற கணக்கில் சமநிலையை எட்டியதுடன் அந்த செட்டையும் தனதாக்கினார்.

2-வது செட் ஆட்டத்திலும் அனல் பறந்தது. முதலில் போர்ன்பவீ (3-0) முன்னிலை பெற்றாலும், அதனை  நீண்ட நேரம் நீடிக்கவிடவில்லை.

அபாரமாக தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த நேவால் 7-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இருப்பினும் போர்ன்பவீ தொடர்ந்து நேவால்க்கு சவாலாக விளங்கினார்.

இதன் காரணமாக 8-8, 11-11, 20-20 என்ற கணக்கில் இருவரும் சமநிலை வகித்தனர். கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சாய்னா ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.

46 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 22-20, 22-20 என்ற நேர்செட்டில் போர்ன்பவீயை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

26 வயதான நேவால் ஒட்டுமொத்தத்தில் வென்ற 23-வது பட்டம் இதுவாகும்.

கடைசியாக கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை சுவைத்து இருந்த நேவால், முழங்காலில் செய்த ஆபரேஷனுக்கு பிறகு வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.

இந்த பட்டம் சாய்னாவின் நம்பிக்கையை நிச்சயமாக அதிகரிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.