ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சத்குரு

மண்ணில் உயிர்ம-வளம் நிறைந்து

0
211
Advertisement

நியூயார்க்

Advertisement

நிலையான வளர்ச்சிக்கு தண்ணீர் என்னும் சர்வதேச பத்தாண்டு (2018 –
2028) செயல்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில், மார்ச் 22ம் தேதி, நியூயார்க்
நகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சத்குரு
கலந்துகொண்டார்.

உலகில் அதிவேகமாக வற்றிவரும் நதிகளுக்குப்புத்துயிரூட்டுவதற்கு மரப்போர்வையை அதிகரிக்கவேண்டும் என்றுவலியுறித்திய சத்குரு அவர்கள், அதிர்ஷ்டவசமாக, உலகின்பெரும்பாலான நதிகள் காடுகளிலிருந்து தோன்றியுள்ளதால், நம்மால்
காடுகளை மீண்டும் உருவாக்கமுடியும்.

மண்ணில் உயிர்ம-வளம் நிறைந்து

போதுமான மரங்கள் இருந்தால்,மண்தண்ணீரைபிடித்துவைத்துக்கொள்ளும் என்றார்.

தண்ணீர் சம்பந்தப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு,தண்ணீருக்கான பத்தாண்டு செயல்திட்டம் வகிக்கும் பங்கு: ஒத்துழைப்புமற்றும் கூட்டாண்மை மூலம் சவால்களை சந்தித்து வாய்ப்புகளைக்கைப்பற்றுவது  குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க, ஐக்கிய நாடுகள்பொது சபையின் தலைவர் திரு.மிரோஸ்லாவ் லேகாக் அவர்கள் சத்குருஅவர்களை அழைத்தார்.

உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின்
அமைப்புகளான UNICEF, UNESCO, ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியமாபெரும் சபையில் சத்குரு பேசியபோது, &சுற்றுச்சூழலுக்கு எல்லைகள்இல்லை.

உலகம் முழுவதுமுள்ள நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கு,
அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்பும், அமல்படுத்தக்கூடிய
ஒரு பொதுவான செயல்திட்டமும் இன்று கட்டாயமான தேவைகளாக
இருக்கின்றன.

துரதிர்ஷ்டவசமாக, மக்கள், பொருளாதாரத்தை இன்றைய
பிரச்சனையாகவும், சுற்றுச்சூழலை நாளைய பிரச்சனையாகவும்
கருதுகிறார்கள். ஆனால் சுற்றுச்சூழல் என்பது இன்றைய பிரச்சனை

என்பதைப் புரிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது. சுற்றுச்சூழல் சார்ந்த
பிரச்சனைகளின் பிரம்மாண்டத்தையும் அவசரத்தையும் நாம் இனியும்
கவனிக்காமல் இருக்கமுடியாது என்றார்.

மார்ச் 21ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் தமையகத்தில் நடந்த
இன்னொரு சிறப்பு நிகழ்ச்சியில் பிரதான பேச்சாளராக இருந்த சத்குரு, நீர்,
சுகாதாரம்  பெண்கள் குறித்து பேசினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியத் தூதுவரும் நிரந்தர பிரதிநிதியுமான
சையத் அக்பருதீன், டுவிட்டரில், பனியின் ஊடே துள்ளிவந்த வசந்தம்.
கடும் பனிப்பொழிவையும் மீறி இதில் கலந்துகொண்ட பலருக்கும்,
வசந்தகாலத்தின் அதிகாரப்பூர்வமான முதல்நாளான இன்று, பெண்கள்
குறித்தும் தண்ணீர் குறித்தும் நடந்த இந்த ஐ.நா. நிகழ்ச்சியில் உங்கள்
கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சத்குரு.

மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவதைக் குறைப்பதும், நுண்ணீர்
பாசனத்திற்கு மாறுவதும் மிக அவசரமான தேவைகளாக இருக்கின்றன
என்று சத்குரு பேசினார்.

நாம் சந்தித்து வரும் நெருக்கடி, சுற்றுச்சூழல்சார்ந்ததல்ல, மக்கள்தொகை சார்ந்தது. தண்ணீருக்கான பத்தாண்டுசெயல்திட்டம், அதிகரித்து வரும் மக்கள்தொகை பிரச்சனைக்கும் தீர்வுதேடவேண்டும், அதற்கான நேரம் வந்துவிட்டது.

விவசாயத்தில்புரட்சிசெய்து நீர்வளப் பயன்பாட்டை மேம்படுத்துவதுவதில், நீர்ப்பாசனமுறைகளை ஒருங்கிணைப்பதும் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிப்பதும் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும்.

வழக்கமான நீர்ப்பாசனமுறைகளிலிருந்து நுண்ணீர் பாசனத்திற்கு மாறுவது, விவசாயத்திற்கானநீர் பயன்பாட்டை 40% குறைக்கமுடியும்.

நுண்ணீர் பாசனம் செய்வது,விவசாயம் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்களில் பெண்களின்பங்கினையும் மேம்படுத்தும்." என்றும் சத்குரு கூறினார்.

இந்த கலந்துரையாடலுக்கு நடுவராக, தஜிகிஸ்தான் குடியரசின்
வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சிரோத்ஜிதின் அஸ்லாவ் அவர்களும்,
சக குழுவினர்களாக, நெதர்லாந்து ராஜ்ஜியத்தின் வெளிநாட்டு வர்த்தகம்

மற்றும் வளர்ச்சித்துறையின் மாண்புமிகு அமைச்சர் திருமதி.சிக்ரித் காக்
அவர்கள், தென் ஆப்பிரிக்கா குடியரசின் நீர் மற்றும் சுகாதாரத்துறையின்
மாண்புமிகு அமைச்சர் திரு.குகில் அங்க்வின்ட்டி அவர்கள், நீர் மற்றும்
அமைத்திக்கான சர்வதேச உயர்மட்ட குழுவின் தலைவர்

மற்றும்ஸ்லோவேனியா குடியரசின் முன்னாள் ஜனாதிபதியாகவும் இருந்த
மாண்புமிகு திரு. தனிலோ துர்க் அவர்கள், பெண்களுக்கான சுற்றுச்சூழல்
திட்டத்தின் செயல் இயக்குனர் செல்வி. பிரிசில்லா அசப்கா, ஆகியோர்
கலந்துகொண்டனர்.

SHARE