சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு..!

sabarimala
Advertisement
Advertisement

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஜன.,22 முதல் விசாரணை நடக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

போராட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆனால் இந்துக்களின் நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் பற்றி கவலைப்படாமல் கோர்ட் உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து 4 ரிட் மனுக்களும், உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி 49 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது இன்று (நவ.13) விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் ஜன.,22 முதல் விசாரணை நடக்கும் எனவும்,

அதுவரை, கோயிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற உத்தரவிற்கு தடை கிடையாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.