மெரினா லைட் ஹவுஸிற்கு செல்ல தடை..!

0
100
மெரினா லைட் ஹவுஸிற்கு செல்ல தடை..!
Advertisement
Advertisement

மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் சீற்றத்தோடு காணப்படுவதால் கலங்கரை விளக்கத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை விடாமல் பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட சற்று உயரமாக அலைகள் எழும்பி வருகின்றன. மேலும், பலத்த காற்று காரணமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் கீழே விழுந்தும் காணப்பட்டன.

வழக்கமாக காணப்படும் மக்கள் கூட்டத்தை விட குறைவாகவே பொதுமக்கள் உள்ள நிலையில், அவர்களை வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றும் பணியில் போக்குவரத்துக் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் சீற்றத்தோடு காணப்படுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் கலங்கரை விளக்கத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சாலைகள் வெறிச் சோடி காணப்படுகிறது.