பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோ..!

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோ..!
Advertisement
Advertisement

துப்புரவு பணிகளை செய்வதற்கு ரோபோக்களை பயன்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆசோசனைக்கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்தியாவில் துப்புரவு தொழிலாளிகள் விஷ்வாயு தாக்கி மரணமடைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த தொழிலை மேற்கொள்வதால், அவர்கள் தொடர்ந்து தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் சாக்கடையை சுத்தம் செய்ய “பண்டிக்கோட்” என்ற ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது.

ஜென்ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் இதை உருவாக்கியது. இந்த வகை ரோபோக்கள் கேரளா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் செயல்பட்டு வருகிறது.

சுமார் 80 துப்பிரவுத்தொழிலாளர்கள் இந்த ரோபோக்களை இயக்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவை தொடர்ந்து டெல்லியிலும் துப்புரவு பணிகளை செய்வதற்கு ரோபோக்களை பயன்படுத்த டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி கேமினட் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்,

ஐஐடி டெக்னாலஜிகல் யுனிவர்சிட்டி, டெல்லி மாநகராட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கழிவை மனிதனே சுத்தம் செய்யும் முறையை முற்றிலும் நீக்க, அவர்கள் செய்த பணிகளை ரோபோட்டை வைத்து செய்வதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டன.

மேலும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியை மனிதர்கள் செய்வதை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுப்பதும் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.