சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா இன்று பொறுப்பேற்றார்..!

0
113
சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா இன்று பொறுப்பேற்றார்..!
Advertisement
Advertisement

1983ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி சுக்லா. இவர் புதிய சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொல்கத்தாவில் மேற்குவங்க அரசிற்கும், சிபிஐக்கும் இடையே மோதல் போக்கு வெடித்துள்ள நிலையில், இந்த பதவியேற்பு நிகழ்ந்துள்ளது.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ நேற்று அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.

ஆனால் அவர்களைத் தடுத்து நிறுத்திய மேற்குவங்க போலீசார், காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி உயர் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன்பிறகு சால்ட் லேக் நகரின் சிஜிஓ காம்பிளக்ஸில் உள்ள சிபிஐ அலுவலகம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது.

பின்னர் துணை ராணுவத்தினர் அங்கு விரைந்ததை அடுத்து, போலீசார் களைந்து சென்றனர்.

58 வயதாகும் சுக்லா, மத்தியப் பிரதேச போலீஸ் டிஜிபியாக பதவி வகித்தவர்.

சிபிஐயின் முழு அதிகாரம் கொண்ட தலைமையாக மாறியுள்ள சுக்லா, மேற்குவங்க அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மேற்குவங்க விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரைக் கண்டித்து,
முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.