ஜோதிட மிரட்டல்…! பத்திரிகை வட்டாரத்தில் பரபரப்பு…!

0
173
ஜோதிட மிரட்டல்...! பத்திரிகை வட்டாரத்தில் பரபரப்பு...!
Advertisement
Advertisement

நன்மையும் -தீமையும்,  அமுதும்- விஷமும்……. என்று இப்படியான நெகடிவ்-பாசிடிவ் தான்…!,

உலகத்தையே இயக்கிவருகிறது..! எனும் அரியதொரு உண்மை தத்துவத்தை….!!!

நமது சமூகத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிகைத்துறையில் ஊடுருவி விட்ட, புல்லுருவிகள் சிலரால்… அந்த தத்துவத்தை நாள்தோறும் நிரூபித்து வருகின்றனர்….!” என்று,

நாம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியிட்டு இருந்தோம் ….  அந்த செய்தியின் தொடர்புச்சியில்

கடந்த 20 ஆண்டுகளுக்குமுன் நிருபர்கள், பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் என்றால்….!  சமுதாயத்தில் மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு…..! என்றும்

“உடலை விற்று பிழைப்பு நடத்தும் அபலைகளையும் விட்டுவைக்காத,  இந்த வேசி எழுத்து வியாபரிகளிடம், சிக்கிக்கொண்டது பத்திரிகைத்துறை..!

தொடர்ந்து 1967 – க்கு பிறகு மாறிவிட்ட அரசியல் நாகரீகத்தில், உளுத்துப் போன ஊழல்வதிகளிடம், தனது பிச்சைகரத்தை நீட்டி அவர்களது எச்சத்தை தின்று……” என்று செய்தியை பதிவு செய்தோம்..!

அதற்கு பல எழுத்து மற்றும் ஒளி ஊடக செய்தியாளர் நம்மை வெகுவாக பாராட்டினார்கள்…

ஆனால் போலி டுபுக்கு செய்தி வியாபார நிருபர்கள்  நம்மை வறுத்தெடுத்து விட்டனர் பயங்கர அவமானமான பதில் வந்தது ……,

அதை நாம் சர்வசாதாரணமாக துடைத்துக் கொண்டேம் காரணம்…!

   நாம் எப்போது தோல்வியடைந்தாலும் சிங்கம்.. புலிகளிடம் தான் மோதிப்பார்போம்…! ஆனால் எந்த காரணமாகவும், பன்றிகளிடம் மோதவேமாட்டோம்…

ஒதுங்கி ஓரமாகச்சென்று விடுவோம், காரணம் உங்களுக்கே தெரியும் பன்றிகளைப்பற்றி….!

நமது தற்பெருமை இப்ப எதற்கு விசியத்திற்க்கு வருவோம்…

கோவையில்.. “மிரட்டல் ஆடியோ ஆதாரம் புகாரில் சிக்கிக் கொண்டு தவிக்கும் கோவை கேப்டன் டிவி செய்தியாளர் மருதாசலம்…!! என்றும்

காப்பாற்றுமாறு பலரிடமும் கெஞ்சல், கதறல்..!!” என்றும் வலைத்தளத்தில் ஒரு பரபரப்பான செய்தி இந்த நிமிடம் வரை வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதை தொடர்ந்து

பணி பறிப்பு சிக்கலில் ..
தமிழ் இந்து கோவை நிருபர் கிருஷ்ணகுமார் ! என்றும் வைரல்ஸ்…..!

மேட்டர் என்று நாம் விசாரித்த பொது….

கோவையில் 2019 ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விமர்சையாக நடந்ததாம்….

அந்த விழாவில் விருதுகள் , பரிசுகள் பெறுவோர் குறித்த பட்டியலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை முன்கூட்டியே வெளியிட்டதாம்…!

அந்த பட்டியலில் இடம்பெறாத நிலையில் , திடீரென இடைச்செருகலாக,

எந்த முன்னறிவிப்புமின்றி கோவை மாவட்டத்திலேயே மிகச்சிறந்த நிருபர் என்று  கிருஷ்ணகுமார் (தமிழ் இந்து) என்பவருக்கு விருது வழங்கப்பட்டதாம்..!

இதேபோல கலெக்டர் ஹரிகரனை திடீரென பாராட்டி கோவை மீடியா சங்க தலைவர் மற்றும் கோவை கேப்டன் டிவி நிருபர் மருதாசலம் பரிசு வழங்கினாராம்…

இதுகுறித்து கோவை மீடியா தலைவரும் கோவை கேப்டன் டிவி செய்தியாளரன மருதாசலத்திடம் கோவை whatsapp குழுவில் விளக்கம் கேட்கப்பட்டதாம்…!

நிகழ்ச்சிநிரலில் சம்பந்தப்பட்ட நிகழ்வு இடம்பெறாத நிலையில் , எந்த நோக்கத்திற்காக இந்த இரு விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது என நியாயமான முறையில் கேள்விகள் கேட்கப்பட்டதாம்…!

அதற்கு கேப்டன் டிவி நிருபர் மருதாசலம் சிலிர்த்துப் பதில் கூறினாராம், இப்படியாக…
அதாவது,

“கோவை மீடியா சங்கத்திற்கு கலெக்டர் நிறைய உதவிகள் செய்துள்ளார். அதற்காகத்தான் கலெக்டர் கௌரவிக்கப்பட்டுள்ளார் என்று விளக்கம் அளித்தாராம்.

இது இந்திய ஊடகங்க வரலாற்றிலே…  முதன் முறையாக….என்று கர்ஜூக்க.. அந்த கர்ஜனை,
பத்திரிக்கையாளர் மத்தியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டதாம்….!

அதை ஏற்றுக்கொள்ளத ஒரே ஒருவர் அது எப்படி “கோவை மாவட்ட சிறந்த நிருபராக கிருஷ்ணகுமார், எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்?

இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டதா..? அந்த கமிட்டியின் மூலமாக தேர்வு செய்யப்பட்டாரா?

அல்லது தனிநபர் மூலம் தேர்வு செய்யப்பட்டாரா?  என்று கேள்விகளைகள் சரமாரியாக தொடுத்தாராம்….!

இதற்கு நேரடியாக பதில் தராமல் கேப்டன் டிவி நிருபர் மருதாசலம் கேள்வி கேட்டவரை மிரட்டல் வார்த்தையில் திட்டி,

” உனக்கு நேரம் சரியில்லை. நீ உள்ள (சிறை) போக போகிறாய் என்று மிரட்டல் பாணியில், நள்ளிரவு குடு… குடும்பை ஜாமக் கோடாங்கி ஜோதிடர் போல், ஆருடம் சொல்ல…!

அந்த கோடாங்கி ஜோதிட மிரட்டல் ஆடியோ ஆதாரம் தற்போது வெளியாகி  தமிழக அளவில் ஊடக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது…..!

இந்த மாதிரி இடக்கு மடக்கா அனல் பறக்கும் கேள்விகளை கேட்டவர் அக்னிக்கதிர் மாத இதழ் ஆசிரியர் கில்மோர்…!

மேற்கண்ட ஜோதிட மிரட்டல் புகார் மனு கோவை எஸ்.பி பாண்டியராஜனிடம் கில்மோர் தந்து விட்டாராம்…!

இது கேப்டன் டிவி நிறுவன நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தரக்குறைவாக பேசி நடந்து கொண்டுள்ளது,

சென்னை ஊடக வட்டாரத்திலும், கேப்டன் டி.வி நிர்வாகத்தினர் கவனத்திற்கும் தற்போது கொண்டு செல்லப்பட்டு விட்டது…..!

இப்போக்கை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தலைவர் அன்பழகனும் கண்டனம் தெரிவித்து விட்டார்….!

இதனால், கோவை கேப்டன் டிவி நிருபர் மருதாசலம் பிழைப்புக்கு எப்போது ஆப்பு அடிக்க போகிறது…? அல்லது

“இதெல்லாம் பத்திரிகையில்  சகஜமப்பா” என்று  கவுண்டமணி டைப்பில், கேப்டன் டிவிவசனம் பேசி கூடி கும்மி அடிக்குமா…?  என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படியக,  மருது….. விருது.. மிரட்டல்…. என்று கோவையில் மீடியா வட்டாரத்தில் ஏற்றப்பட்ட கலகலப்பு… எட்டு திசையில் ஒலிக்கிறது…!

கொடுமை என்வென்றால்….
போலிகளின் தொல்லை தான் பத்திரிகை வட்டாரத்தில் கொசுத் தொல்லை என்றால்…!

ஒரிஜினல்களின் அலப்பறை மிரட்டல்கள் அசிங்கம் அளவுக்கு போய் விட்டது.

இது மேலே பார்த்து எச்சில் துப்புவதற்கு ஒப்பானது…!
மேலும் இது

“பத்திரிகை வரலாற்றிலேயே முதல் முறையாக வெட்க கேடு….!” என்று மட்டும் யாரும் நினைத்து விடவேண்டாம்….!

இது போல் வெளியே தெரியாமல் நீர் பூத்த நெருப்பாக பல மிரட்டல் ஐட்டங்கள் இருக்கிறது….!

கில்மோர்… தில்மோராக.. இருந்த காரணத்தால் மருதாச்சாலம் மானம் மாநிலம் மட்டும் அல்ல,

அகில உலகில் உள்ள அனைத்து தமிழ் வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் எல்லாம் நாறிவிட்டது…!

நடந்து விட்ட இந்த அசிங்கம்…! ஏதாவது ஒரு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்…!
இது தான் சரியான சமூக நீதியாக இருக்கும்…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119

சிறந்த நிருபர் விருதை தமது அலுவலகத்திற்கு தெரியாமல் ஆட்சியரிடம் வாங்கிய கோவை தமிழ் இந்து நிருபர் கிருஷ்ணக்குமார்

சர்ச்சை போட்டோ

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119