நமது உடல்…! பூதஉடலா…?

நமது உடல்...! பூதஉடலா...?
Advertisement
Advertisement

பிரபஞ்சக்திலுள்ள அனைத்துமே பஞ்ச பூதங்களின் சேர்க்கையினாலேயே  உருவாகி உள்ளது.

       நீர், நிலம், காற்று , ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்தையே பஞ்ச பூதங்கள் என்கிறோம்,

நமது பருவுடலும் பஞ்ச பூதங்களால் ஆனதே. உடலில் ஒவ்வொரு திசுவிலும். உறுப்புகளிலும் பஞ்ச பூதங்களே நிறைந்துள்ளன பூதங்களின் சேர்க்கை விகிதாச்சார மாறுதல்களே ஒவ்வொன்றிற்கும் தனித்தனித் தன்மைகளைக் கொடுக்கிறது.

      நமது பருவுடலில் ஒவ்வொரு பூதமும் தனது இயல்பான விகிதாச்சாரத்தில், அளவில் இருக்கும் வரையல் எந்த பிரச்சினையும் இல்லை. இயல்பு நிலையல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது பிரச்சினைகள் உருவாகத் துவங்குகின்றன.

        அனைவரது உடலிலும் சிறிய அளவிலான பஞ்சபூத ஏற்றத்தாழ்வுகள் அவ்வப்போது தோன்றும் ; தானாகவே சரியாகிவிடும். ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் இந்தக் குறைபாடுகள் தொடர்ந்து இருக்கும்போதுதான் அது நோய்களாக உருமாறுகிறது.

      இந்த பஞ்ச பூதங்களில் ஏற்படும் குறைபாடுகள் உடலின் இயக்கங்களில் மாறுதல்களை ஏற்படுத்துவதோடு, உடலின் உன்உறுப்புகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உள்ளுறுப்புகள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தான் உருவாகியுள்ளன. எனினும், ஒவ்வொரு உறுப்பிலும் ஒரு பஞ்சபூதத்தின் ஆளுமை அதிகமாக இருக்கும். சில உதாரணங்களைக் காணலாம்.

‘ இதயம் : ‘ நெருப்பு ‘ எனும் பஞ்சபூதத்தால் ஆளப்படுகிறது. இந்த பூதம் தொடர்ந்து இயல்பு நிலையைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் இதய நோய்கள் உருவாகின்றன.

சிறுநீரகங்கள் : இதை ஆளும் பூதம் ‘ நீர் ‘ ஆகும். இந்த பூதத்தில் ஏற்படும் குறைபாடுகளே சிறுநீரக நோய்களுக்குக் காரணமாகின்றன.

நுரையீரல்கள்: ‘காற்று ‘ எனும் பஞ்சபூதத்தால் ஆளப்படுகின்றன. காற்று எனும் பூதம் தன் இயல்பு நிலையிலிருந்து மாறுபடும்போது நூரையீரல்கள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன.

    நமது உடல்… ஒவ்வொரு உள்ளுறுப்பும் ஒரு பூதத்தின் ஆளுமைக்கு உட்பட்டதாகவே உள்ளது, அதனால் தான் உயிர் நீத்த உடலை, பூதஉடல் என்று அர்த்தம் கொள்கிறது..

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119