ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்..!

42
612
ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்..!
Advertisement

ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்..!

Advertisement

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ அதிரடியாக அறிவித்த 4ஜி ஃபீச்சர்போன் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று மாலை  5:30 மணிக்கு  அந்நிறுவனத்தில் இணையதளத்திலும, ஸ்டோர்களிலும் தொடங்குகிறது.

இதற்காக முதற்கட்டமாக ரூ.500 முன்பதிவுக்கு செலுத்த வேண்டும், பின்னர் செம்படம் மாத தொடக்கத்தில் ஜியோபோன் வாங்கும்போது மீதமுள்ள ரூ.1000 செலுத்த வேண்டும்.

முகேஷ் அம்பானியின் இந்த கனவு திட்டத்தில், முதற்கட்டமாக முதல் ஆண்டில் மட்டும் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்த ஜியோ போனை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபீச்சர்போனில் 4ஜி வோல்ட்இ  சிறம்பம்பம்சம் கொண்ட இந்த ஜியோபோன் மற்ற நிறுவன ஃபீச்சர்களுக்கு போட்டியாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தபோன் முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக பாதுகாப்பு தொகையாக தொடக்கத்தில் ரூ.1,500 செலுத்த வேண்டும்.

இந்த தொகையானது மூன்று வருடங்களில் திரும்ப கொடுக்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபீச்சர்போன் என்றபோதிலும், வீடியோ கால்ஸ், வெப் ப்ரவுசிங் என்ற பல்வேறு சிறம்பம்சங்கள் உள்ளதால்,

ஜியோபோனுக்கு அதிக டிமான்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.