கோவையில் ரேக்ளா பந்தயம்..!

48
588
கோவையில் ரேக்ளா பந்தயம்..!
Advertisement

கோவையில் ரேக்ளா பந்தயம்..!

Advertisement

உலக பிரசித்தி பெற்ற கோவை ரேக்ளா பந்தயம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு ரேக்ளா கிளப் சார்பாக கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெறுகிறது.

200 மீட்டர்  மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளாக  இப்போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் நூற்றுக்கும்  மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.

ரேக்ளா பந்தயத்தை பார்வையிட ஆர்வமுடன் ஏராளமானோர் குவிந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு வேலி கட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வண்டிகளின் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தின் பிரபல விளையாட்டான ரேக்ளா பந்தயம், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பாரம்பரிய அடையாளம்.

இப்போட்டியை நடத்துவதற்கு கடந்த நான்கு வருடங்களாக தடை நீடித்து வந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியுடன் சேர்த்து, ரேக்ளா பந்தயத்துக்கான தடையும் நீக்கப்பட்டது.

இதனால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. தற்போது, கோவையிலும் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.