அர்த்தமுள்ள ஆன்மீகம்….! நல்லதையே நாம் அறிவோம்…!

அர்த்தமுள்ள ஆன்மீகம்....! நல்லதையே நாம் அறிவோம்...!
Advertisement
Advertisement

நமது ஆன்மிக தர்மத்தால் மட்டுமே பிறப்பு – இறப்பு சூழலில் இருந்து நம்மை விடுவிக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் சில கடமைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

  தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்பு படுக்கையில் இருந்து எழ வேண்டும்.

   காலையில் நீராடி தூய ஆடை அணிந்ததும் தவறாமல் இறை வழிபாடு செய்ய வேண்டும்.

    காலை, மாலை இரு நேரமும் நெய் விளக்கேற்றி நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

     நேரம் இருப்பவர்கள் உரிய மந்திரங்கள்
சொல்லி வழிபடுங்கள்.

   நெற்றியில் திருநீறு, குங்குமம் அணியாமல் இருக்கக் கூடாது.

   தினமும் புராண, இதிகாச, தேவார – திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட சமய நூல்களை படிக்க வேண்டும்.

   வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் தியானம் பழக வேண்டும்.

    ஆலயங்களில் நடத்தப்படும் பஜனை, சத்சங்கம், கதாகாலட்சேபம், சமய சொற்பொழிவுகளை சென்று கேட்க வேண்டும்.

   வீட்டில் நம் கண்ணுக்கு அடிக்கடி படும் இடத்தில் ‘ஓம்’ படத்தை மாட்டி வைக்கவும்.

   விரத நாட்கள், பண்டிகை தினங்களை பொழுதுபோக்கு நாட்களாகக் கருதாமல் ஐதீகத்தை உணர்ந்து ஆத்மார்த்தமாக கடைபிடிக்க வேண்டும்.

    மாதத்துக்கு ஒரு தடவையாவது வீட்டில் நாம சங்கீர்த்தனம் செய்வது அல்லது சிறப்பு வழிபாடுகள் நடத்தலாம்.

    மடாதிபதிகள், துறவிகள், ஞானிகளை சந்தித்து ஆசி பெற வேண்டும். துறவிகள் பார்வை நம் மீது பட்டால் தோஷங்கள் விலகும்.

   தினமும் ஆலயம் செல்ல வேண்டும். முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு தடவையாவது ஆலயத்துக்கு சென்று, நிதானமாக, மனதை ஒருமுகப்படுத்தி இறைவழிபாடு செய்ய வேண்டும்.

   ஆலயத்துக்கு செல்லும்போது தனியாக செல்லாமல், மனைவி மற்றும் குழந்தைளை அழைத்து சென்று உரிய முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

தினமும் ஆலயத்துக்கு சென்றால் நாளடைவில், வழிபாட்டு ரகசியங்கள் உங்களுக்கு புரிந்து விடும். ஆலய வழிபாட்டில் உள்ள கேள்வி களுக்கு விடை கிடைக்கத் தொடங்கி விடும்.

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119