பேட்ட படத்தின் டிரெய்லா் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

பேட்ட படத்தின் டிரெய்லா் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
Advertisement
Advertisement

ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள பேட்டபடத்தின் டிரெய்லா் வருகின்ற 28ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகா்கள் உற்சாகம் அடைந்துள்ளனா்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் வருகின்ற பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது.

அதே தேதியில் நடிகா் அஜீத்தின் விஸ்வாசம் படமும் வெளியாக உள்ளதால் இரு தரப்பினரும் தங்கள் படத்தை பிரமோட் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் பேட்ட படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது.

படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி,

மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லா் எப்போது வெளியாகும் என்று ரசிகா்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனா்.

அவா்களுக்கு விருந்து படைக்கும் விதமாக படக்குழு டிரெய்லா் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி வருகின்ற 28ம் தேதி பேட்ட படத்தின் டிரெய்லா் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.