வாட்ஸ் ஆப் அட்மின்களுக்கு ரஜினியின் வார்னிங்…!

வாட்ஸ் ஆப் அட்மின்களுக்கு ரஜினியின் வார்னிங்...!
Advertisement
Advertisement

ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் ஆப் குரூப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும்,

அப்படி நீக்காவிட்டால் குழுவின் அட்மின்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி அரசியலில் நுழைவதாக அறிவித்த பிறகு அவரது ரசிகர் மன்றக் குழுவினர்,

ஓவ்வொரு முக்கிய நகரங்களிலும் வாட்ஸ் ஆப் குரூப் துவங்கி மற்ற அரசியல் கட்சிகள் போலவே இயங்கி வருகின்றனர்.

இதில் பகிரப்படும் முக்கிய புகார்கள் ரஜினியின் பார்வைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நபர்கள் வாட்ஸ் ஆப் குரூப்பிலிருந்து நீக்கப்படாமல் தொடர்ந்து குரூப்பில் நீடித்து வருவதாக ரஜினிக்கு தகவல் சென்றுள்ளது.

இந்நிலையில், ‘மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது.

மேலும் ரஜினி மக்கள் மன்ற குரூப்பின் பெயர்களை, அவர்கள் இஷ்டம்போல மாற்றக்கூடாது .

அந்தந்த மாவட்ட, ஒன்றியம் மற்றும் நகரத்தின் பெயர்களை வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வைக்கவேண்டும்.

அந்தந்த மாட்டத்தில் இருப்பவர்கள் அவரவர் மாவட்டத்தில் இயங்கும் வாட்ஸ் ஆப் குழுக்களில் மட்டுமே சேரவேண்டும்’’ என்று,

ரஜினி தரப்பிலிருந்து மன்ற குரூப் அட்மின்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.