மீண்டும் மிரட்ட வரும் மழை..!

0
107
மீண்டும் மிரட்ட வரும் மழை..!
Advertisement
Advertisement

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:

நேற்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென் மேற்குவங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி அருகே நிலை பெறும்.

அடுத்த 24 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும்.

இதன் காரணமாக, இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். நவ., 20, 21ம் தேதிகளில் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.

கடலூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கால், ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு. மீனவர்கள், 20, 21ம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம்.

சென்னை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில், 7 செ.மீ., கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது.