இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
Advertisement
Advertisement

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று முதல் 24- ம் தேதி வரை கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

கடந்த வாரம் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது.

இதனால், தென் மாவட்டங்களில் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. அதே நேரம், சென்னையில் காற்றுடன் மழை பெய்தது.

இந்தநிலையில், புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி வருகிறது.

தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில், இன்று முதல், 24-ம் தேதி வரை, கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.