ரகுல் ப்ரீத்தி விரிக்கும் கவர்ச்சி கர்சீப்!

0
256
ரகுல் ப்ரீத்தி
Advertisement
Advertisement

திறமை, அழகு, கவர்ச்சி அத்தனை அம்சங்களும் அட்டகாசமாக இருந்தும் பஞ்சாபி குதிரை ரகுல் ப்ரீத் சிங்கால் பாய்ச்சல் காட்ட இயலவில்லை.

மீண்டும் தெலுங்கு கரையோரம் ஒதுங்கியவருக்கு அங்கு வாய்ப்புகள் கியூ கட்ட, அங்கு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் ரகுல்.

கடந்த  3 ஆண்டுகளாக  தமிழ் சினிமா பக்கம் தலையே காட்டவில்லை. சமீபத்தில் விஷால் படத்தில் நடிக்க பேச்சு நடந்தது.

நடிக்க ஒப்புக்கொண்டவர் ஏனோ திடீரென ரிவர்ஸ் அடித்தார். இதற்கிடையில் தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார் ரகுல்.

கவர்ச்சி ஹீரோயினாக வலம் வரும் ரகுல், முருகதாஸ் படத்தில் நீச்சல் உடையில் நீராட சம்மதித்திருக்கிறாராம்.

அடுத்து தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வரும் என கர்சீப் விரித்து காத்திருக்கிறார் ரகுல்.