ராகுல் காந்தியின் புதிய வாக்குறுதி – ஏழைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம்…!

0
103
ராகுல் காந்தியின் புதிய வாக்குறுதி - ஏழைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம்...!
Advertisement
Advertisement

வரும் மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், வரும் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால்,

ஏழைகளுக்கு நாடு தழுவிய குறைந்தபட்ச வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க விஷயமாக மாறும்.

ஏழைகள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக பணம் அளிக்கப்படும்.

இந்த திட்டம் உலகத்திலேயே இதுதான் முதல் முறை.

சட்டீஸ்கரில் விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி தான்,

எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. இதன்மூலமே பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்துள்ளது.

எவர் ஒருவரும் பசியுடனும், ஏழையாகவும் இருக்க மாட்டார்கள். ஏனெனில் எங்கள் ஆட்சியில் அனைத்து ஏழைகளுக்கும் உத்தரவாதமிக்க வருமானம் அளிக்கப்படும்.

இதனை சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்துவோம்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், வரும் தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

வரும் வெள்ளிக்கிழமை அன்று தாக்கல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதில், ”அனைவருக்குமான அடிப்படை வருமானம்”(UBI) என்ற திட்டம் மூலம் விவசாயிகளின் கோபத்தை அமைதிப்படுத்தவும்,

வரும் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவு பெறவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, UBI குறித்த தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் முக்கியப் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,

2004 -2014 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 140 மில்லியன் மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து உயர்த்தப்பட்டனர். தற்போது ஏழ்மையை ஒட்டுமொத்தமாக விரட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

ராகுல் காந்தியின் அறிவிப்பை மெய்ப்பிக்க உரிய காரணிகளை காங்கிரஸ் தேடி நடைமுறைப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.