முதல் டெஸ்ட் போட்டி: புஜாரா சதம்..!

முதல் டெஸ்ட் போட்டி: புஜாரா சதம்..!
Advertisement
Advertisement

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் விளாசினார் இந்திய அணியின் புஜாரா.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் அடிலெய்டில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது.

எதிர்பார்த்த படியே ஸ்டார்க், ஹேசல்வுட் இருவரும் பவுன்சர்களாக வீசி மிரட்டினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் ராகுல் 2 ரன் எடுத்தார். அ

டுத்து ஹேசல்வுட் வீசிய ஓவரில் ராகுல் (2) அவுட்டானார். ஹேசல்வுட் ஓவரில் இப்போட்டியின் முதல் பவுண்டரி அடித்தார் முரளி விஜய். இவர் 11 ரன்னுக்கு ஸ்டார்க் ‘வேகத்தில்’ வீழ்ந்தார்.

பெரிய நம்பிக்கையுடன் வந்த கோஹ்லி 3 ரன் எடுத்த போது, கவாஜாவின் ‘சூப்பர்’ கேட்ச் காரணமாக திரும்பினார். அடிலெய்டு மைதானத்தில் ஒற்றை இலக்க ரன்னில் இவர் அவுட்டானது இது தான் முதன் முறை.

ரகானே, புஜாரா இணைந்து அணியை எப்படியும் சரிவில் இருந்து மீட்பர் என நம்பப்பட்டது. ஹேசல்வுட் பந்தில் பவுண்டரி அடித்தார் புஜாரா.

மறுபக்கம் லியான் பந்தை சிக்சருக்கு விரட்டி ஆறுதல் தந்தார் ரகானே. கடைசியில் இவரும் 13 ரன்னுக்கு அவுட்டாக இந்திய அணி 41 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை பறி கொடுத்து தள்ளாடியது.

அடுத்து வந்த ரோகித் 37, ரிஷாப் 25 ரன்கள் எடுத்தனர். புஜாரா அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இவர் டெஸ்ட் அரங்கில் 16வது சதம் எட்டினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்திருந்தது.