ஆரம்ப கல்வி அவலம்..!

0
107
ஆரம்ப கல்வி அவலம்..!
Advertisement
Advertisement

அ….ஆ…இ…ஈ.. என்று துவங்கும் கல்வி என்பது குழந்தைகளின் 5 வயதில் தொடங்கி 10 வயது வரை கல்வி கற்கும் நிலைதான் துவக்க கல்வி ஆகும்.

இது தான் கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சமூக மதிப்புகள், குறிக்கோள்கள், நம்பிக்கை, விருப்பங்கள், பழக்கவழக்கங்கள் பண்பாடு போன்றவற்றை விதைக்கும் இடம் ஆகும்.

குழந்தைகளுக்கு முதன்மையான கல்வியை கற்றுதரும் முதல் களம்..! துவக்கப்பள்ளி..!

கல்வி களத்தின் அஸ்திவாரமான ஆரம்பகல்வி சரியாக இருந்தால் தான், உயர்கல்வி மேல்கல்வி, கல்லூரி அதை தொடர்ந்து பல்கலை என்று ஆய்வின் உச்சிக்கு உயர முடியும்..!

ஆரம்ப கல்வி எனும் அஸ்திவாரம் சரியாக அமையாவிட்டால் கல்வி கட்டிடம் எப்படி உயர முடியும்..? அரசு கல்வி எப்படி உள்ளது என்பதை கல்வி அமைச்சர் ஒரு சர்வே ரிப்போர்ட் தருகிறார்.

தமிழகத்தில் அரசு துவக்க பள்ளிகள் 20 ல் ஒரு மாணவர் கூட இல்லை. 890 பள்ளிகளில் , 10 மாணவர்களுக்கு குறைவாக பயின்று வருகின்றனர் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நமது அரசு பள்ளியில் அவலத்தை புள்ளி விபரங்களுடன் சுட்டிகாட்டியுள்ளார்.

அரசு கல்வி அடிமாடு கதிக்கு எப்படி மாறியது என்பதை ஓய்வு பெற்ற கல்வித்துறை நிபுணர்களிடம் கேட்டால் மக்கள் மன்றத்தில் சிரிப்பாய் சிரிப்பார்கள் காரணம்… கல்வியை தனியார் துறைக்கு தாரை வார்த்ததின் விளைவு…!

ஆரசு கல்வி களம் அதாவது ஆரம்ப கல்வியான அஸ்திவாரம் ஆட்டம் கண்டு வருகிறது. இதன் காரணமாக கல்வி இன்று வியாபாரமாகிவிட்டது.

கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று கரடியாக கத்தும் சமூக ஆர்வலர்களுக்கு இன்று அரசு கல்வியில் உள்ள நான்கு வர்ணங்கள் தெரியுமா..?

அதாவது நான்கு வகையான ஜாதிகள்…!

ஆவலம் தொடரும்……..

தொகுப்பு: சங்கரமூர்த்தி., 7373141119