லக்னோவில் மக்களை சந்தித்த பிரியங்கா…!

லக்னோவில் மக்களை சந்தித்த பிரியங்கா...!
Advertisement
Advertisement

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் புல்லட் புரூப் வேனில் 5 மணி நேரத்தில் 15 கி.மீ நகர் ஊர்வலம் சென்றுள்ளார் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

உடன் அவரது கட்சித் தலைவர் மற்றும் சகோதாரர் ராகுலும் இருந்தார். இவரைக் காண மக்கள் திரளாக சாலையில் கூடினர்.

இவர்களுடன் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

பர்லிங்க்டன் பகுதி அருகே வந்து, 15 கி.மீ தூரத்தை வேன் மூலம் கடந்து முடித்ததும் இருவரும் எஸ்யூவீ காரில் ஏறிச் சென்றார்.

முன்னதாக பிரியங்கா டுவிட்டர் சமூக வலைதளத்தில் இணைந்த முதல்நாளே அவருக்கு 60,000-க்குமேல் பாலோயர்கள் குவிந்தனர்.

அதே சமயம் ராகுல் மீண்டும் மீண்டும் தன் கட்சியில் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

காங்., தனது வம்சாவளி ஆட்சியை தொடர்ந்துகொண்டு இருக்கிறது என பாஜ., குற்றஞ்சாட்டியிருந்தது.

பிரியங்காவுக்கு முன்னாள் பிரதமர் மற்றும் அவரது பாட்டி இந்திரா காந்தியின் சாயல் இருப்பது மக்களை கவர்வதில் முக்கிய பங்காற்றுகிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ட்ரம்ஸ் இசை, மலர் தூவல்களுக்கு இடையே ராகுல் 15 நிமிடங்கள் பேசினார்.

காங்., தலைமையில் நல்லாட்சி விரைவில் மலரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.