ஆபாசமாக நடிக்க சொன்ன பிரபல இயக்குனர்- போட்டுடைத்த நாயகி

ஆபாசமாக
ஆபாசமாக
Advertisement

ஹாலிவுட் சினிமா

Advertisement

பாலிவுட் சினிமாவை தாண்டி பலரின் ஆசையாக இருக்கும் ஹாலிவுட் சினிமாவில் கால் பதித்து பிஸியாக நடித்து வருகிறார் இந்த நாயகி.

முதலில் ஹாலிவுட்டில் சீரியல் மூலம் களமிறங்கி இப்போது படம் நடிக்கிறார்.

அதிர்ச்சி தகவல்

இவர் சினிமாவில் தான் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசும்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

உலக அழகி பட்டம் வென்று சினிமாவிற்குள் வந்தபோது சில கசப்பான அனுபவங்கள் கிடைத்தன. இயக்குனர்களில் கேவலமான இயக்குனர்களும் உள்ளனர்.

ஆரம்பத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன்.

இரண்டு நாட்கள் அதில் நடித்தேன். பிறகு இயக்குனர் என்னிடம் வந்து என்ன உடை அணிந்திருக்கிறாய், இதுபோல் உடை அணிந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள்.

நடிக்க முடியாது

உடம்பு முழுவதும் தெரிகிற மாதிரி உடை அணிந்து ஆபாசமாக நடித்தால்தான் பார்ப்பார்கள் என்றார்.

இதனால் அதிர்ச்சியாகி வீட்டுக்கு வந்துவிட்டேன். பொருளாதார நிலைமை மோசமாக இருந்த நிலையில், தெரிந்தவர்களிடம் உடனடியாக பணம் திரட்டி அந்த படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டு நடிக்க முடியாது என்று கூறி விலகி விட்டேன் என்று கூறியுள்ளார்.