சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!

சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!
Advertisement
Advertisement

லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி வரும் மார்ச் 6ம் தேதி சென்னை வருகிறார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதிமுக – பாமக இடையே கூட்டணி உறுதியானது. அதேபோல அதிமுக -பாஜக., கூட்டணியும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் நாடு முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வரும் மார்ச் 6 ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். சென்னையில் நடக்கும் பிரம்மாண்ட கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார்.

வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும் நிலையில், மீண்டும் மார்ச் 6ம் தேதி பிரசாரத்திற்காக தமிழகம் வர உள்ளார்.