ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா..!

ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா..!
Advertisement
Advertisement

டில்லியில் பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

மலையாள சினிமா நடிகர் மோகன்லால், சர்தார் சுக்தேவ் சிங் தின்சா, ஹூகும்தேவ் நாராயண் யாதவ் உள்ளிட்டோருக்கு பத்மபூஷன் விருதுகளும்,

பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா, டென்னிஸ் வீரர் ஷரத் கமல், செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா டிரோநவாளி, இசையமைப்பாளரும் பாடகருமான ஷங்கர் மகாதேவன்,

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.

விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.