இளம் இந்திய பணியாளர் பிரதாப் முருகனின் வெற்றி ரகசியம்..!

48
672
Advertisement

இளம் இந்திய பணியாளர் பிரதாப் முருகனின் வெற்றி ரகசியம்..!

Advertisement

சிவீல் சர்வீஸ் தேர்வுகளான I.A.S, I.P.S., என்பது வசதிபடைத்த மேல் தட்டு மக்களுக்கு உரித்தான கல்வி. என்பதை முறியடித்துவிட்ட தமிழக  மாணவச் செல்வங்களுக்கு “தமிழ் செய்தி”யின் வாழ்த்துக்கள் .

வெற்றியாளர்கள்1099 போர்களில், 84 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமிதப்படுத்தப்பட்டாலும்.

அதிலும்  ஒரு உழவன் மகன் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பிரதாப் முருகன், தமிழக அளவில் முதலிடம்  பெற்றது நமக்கு கூடுதலான இரட்டிப்பு  மகிழ்ச்சியை தருகிறது .

விவசாயி முருகவனம் மனைவி முல்லைக் கொடி. இவர்களின் மகன் பிரதாப் முருகன்.

வத்திராயிருப்பு அரிமா ஆரம்பப்பள்ளியில் படித்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர்.

தற்போது I.A.S., தேர்வில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த பிரதாப் முருகனை, வத்திராயிருப்பு வாழ்மக்கள் ஊர் கூடி கொண்டாடி மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள் .

இவரின் சாதனை குறித்து , அவரது தாய் முல்லைகொடி கூறியதாவது:

எனது மகன் கனவு நிறைவேறிவிட்டது. இது என் மாமனார் கருப்பையா தேவரின் ஆசீர்வாதம் தான் என்றால் மிகையாகாது .

இந்த ஊர் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க அரும்பாடுபட்டவர். அவரின்  உண்மை உழைப்புக்கு இறைவன் தந்த பரிசு தான் இது.

எனது மகனின் சாதனைகள் தொடர வேண்டும், அப்துல்கலாம் பெயரை நினைவு கூறும் வகையில் அவனது பணி சிறக்கவேண்டும்.

அது எங்கள் மாமனார் கருப்பையத்தேவரின் புகழ் பாடச் செய்யும், இது எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல்  இந்த மண்ணுக்கே பெருமை தருவதாகும் என தெரிவித்தார்.

                                               

எனது அண்னனின் ஆட்சிபணி அனைவரின் பொதுநலக்கோட்பாடுகளுக்கு நலம் தரும் வகையில் சிறக்க வேண்டும் என்றார்  தம்பி சிவராம் போஸ்….!

சொல்வதர்க்கு வார்த்தைகள் இல்லை … எல்லாம் உண்மை , உழைப்பு , இறையருள் தான் என்றார், சாதனைக்கு சொந்தக்காரரின் தந்தை முருகவனம்…

பிரதாப் முருகன் தனது கருத்துக்களை நம்மிடையே பதிவு செய்த போது :

தேர்ச்சியில் இடம் பிடித்து  விடுவேன் என்ற நம்பிக்கையில் மட்டும் தான் இருந்தேன், ஆனால் இந்த சாதனை பட்டியலில் இடம் கிடைத்து எனக்கும் உங்களை போல் வியப்பு தான்,

எனது தாத்தா(கருப்பையாத்தேவர்) கல்விக்காக தன்னை அர்ப்பணித்தவர், அவரது நல்ல பெயரை காப்பாற்றுவதே எனது கடமையாகும்…!

இதிலே எல்லாச் சிறப்புகளும் இருக்கிறது….. என்றார் இளம் இந்திய பணியாளர் பிரதாப் முருகன்….!!!!!

எல்லை இல்லா  மகிழ்ச்சியுடன் ஊரை சுற்றி கட்டவுட்டுகள். நாமும் அவரை வாழ்த்துவோம்..

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119