நட்சத்திரங்களின் ஆன்மீக ஆற்றல்கள்…!?!

power of natchathra
Advertisement
Advertisement

நமது தேசத்தின் பழம்பெரும் ஆன்மீகம் நமக்கு கற்றுத்தந்துள்ள பல அற்புதங்களில் வானசாஸ்திரம் எனும் ஜோதிடக்கலையின் மகிமையை… ! இன்றைய நவீன விஞ்ஞானம் பலவாறு வியந்து ஆய்வு செய்து…!
அதன் உண்மைத் தன்மையை உறுதி தான் செய்ய முடிகிறது…!
ஆனால் நமது ஆன்மீகப் பெரியவர்கள் அன்றே உறுதிபட சொல்லிவிட்டனர்…!

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு ஆற்றல் அதிகம் என்கிறது,வானசஸ்திர அறிவியல்.  கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு நாத ஒலியும் அதிகம்..!

நட்சத்திரங்களுக்கு பல துணை நட்சத்திரங்கள் உண்டு, என்பது வல்லுனர்களின் கருத்தாகும்…

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு பழமொழி உண்டு..!
ஒவ்வொரு நட்சத்திரத்திலும் 4 பாதங்கள் உண்டு, ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களுக்கும் குணாதிசயங்கள் மாறுபடும்.

பாதங்கள் என்பது என்ன?

ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதங்கள். ஒளிக்கற்றைகளை நான்காகப் பிரிப்பார்கள். அதனால்தான் 4 பாதங்கள்.

நாழிகை தான் கணக்கு. அதாவது ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை. அதை நான்காகப் பிரித்தால் 15 நிமிடங்கள், ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நிமிடம் முதல் பாதம், அடுத்த 15 நிமிடம் இரண்டாம் பாதம்.

நட்சத்திரம் என்றால் 27 நட்சத்திரமும் நல்ல நட்சத்திரங்கள்தான். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு.

என்னதான் நல்ல நட்சத்திரத்தில் பிறந்தாலும் கெட்ட கிரகங்களின் தசா புக்திகள் நடக்கும்போது நல்ல குணத்தில் இருந்து மாறி கெட்ட நடவடிக்கைகள் இருக்கும்.

எனவே நட்சத்திரத்தை வைத்து ஒருவர் இப்படி இருப்பார் என்று முடிவுக்கு வந்து விட முடியாது. அவரது கிரக அமைப்புகளையும் பார்க்க வேண்டும்.

இனி ஒவ்வொரு நட்சத்திரத்தின் பொது பலன் குணங்களை தினமும் பார்க்கலாமா…?

தொகுப்பு:- சத்ர…!