மும்பையை அடுத்து தமிழகத்தில் கனமழை…! வெள்ளத்தில் சிக்குமா சென்னை..?

39
580
மும்பையை அடுத்து தமிழகத்தில் கனமழை…! வெள்ளத்தில் சிக்குமா சென்னை..?
Advertisement

மும்பையை அடுத்து தமிழகத்தில் கனமழை…! வெள்ளத்தில் சிக்குமா சென்னை..?

Advertisement

அசாம், பீஹார் உள்ளிட்ட 6 மாநிலங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில்,மும்பையை அடுத்து தமிழகத்தில் கனமழை…! வெள்ளத்தில் சிக்குமா சென்னை..?

அடுத்த 3 நாட்களில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று ஒரே நாளில் 298 மில்லிமீட்டர் மழை பதிவானதால் நகரம் வெள்ளக்காடானது.

காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் மட்டும் சுமார் 30 சென்ட்டீமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு மஹாராஷ்டிராவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேச மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மஹி, சபர்மதி, பனாலு மற்றும அவற்றின் கிளை நதிகள் ஏற்கனவே 94 சதவீத நிரம்பி வழிகிறது.

திங்கட்கிழமை வரை கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 15 பகுதிகளில் 19 முதல் 4 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை மையம் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனழை பெய்ய வாய்ப்புள்ளதால்,

மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், கோவா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரபிரதேசம்,

தமிழ்நாடு, கேரளா, டாமன், டையூ உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த 12 மாநிலங்களில் மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கிறது.

அசாம், பீஹார், உத்தரபிரதேசம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம், குஜராத், கொங்கள், கோவா, கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள்,

கனமழை முதல் மிக கனமழையைப் பெற வாய்ப்புள்ளதாக அரசு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 நாட்களில் 14 ஆறுகள் மற்றும் அதன் கிளை நதிகளின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்ழுடுகிறது.

மிதமான வெள்ள நீரால் கோதாவரி, இந்திராவதி மற்றும் அதன் கிளை நதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் தெலங்கானா மற்றம் ஆந்திர பிரதேசத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவின் 4 மாவட்டங்களை கடந்து வரும் காவேரி மற்றும் அதன் கிளை நதிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது,

எனினும் நீரை தேக்கிவைக்க போதுமான நீர் தேக்க வசதி இருப்பதால் பாதிப்பு இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தகவல்கள்: கவின்