தேவர் கல்லூரியில் பொங்கல் விழா..! 

0
130
தேவர் கல்லூரியில் பொங்கல் விழா..! 
Advertisement
Advertisement

கமுதியில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் தைத்திருநாளை முன்னிட்டு அனைத்துறை சார்பிலும் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வே.அருணாச்சலம் அவர்கள் தலைமை வகித்தார்,

பேராசிரியர்கள்,மாணவர்கள்,மாணவிகள்,அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

பின்பு நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில் நெகிழி ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்,

இதில் கல்லூரி மாணவர்களுக்கு,பொதுமக்களுக்கும்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைவருக்கும் துணிப்பை மற்றும் மரக்கன்றுகளை  வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில் முனைவர் போ.பால்பாண்டியன் ஏற்பாடு  செய்துருந்தார்,

செஞ்சிலுவை சங்கத்தின் திட்ட அலுவலர் வாகை பாண்டியன்,செஞ்சுருள்சங்க திட்ட அலுவலர் முனைவர் கே.ஜெயக்காளை,

நாட்டுநலப்பணித்திட்டத்தின் அலுவலர் ரா.சிவராமகிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.