பொள்ளாச்சி பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்..!
Advertisement
Advertisement

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை கும்பல் ஒன்று, பேஸ்புக் மூலம் நட்பாக பழகி, பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளது.பொள்ளாச்சி பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்..!

இதுகுறித்து இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வழக்கு ஆவணங்கள் விரைவில் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சிபிசிஐடியின் ஒரு பெண் எஸ்பி வழக்கு விசாரணையை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.