தடையை மீறி பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுகவினர் கைது..!

தடையை மீறி பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி உள்பட திமுகவினர் கைது..!
Advertisement
Advertisement

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

250க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்த கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறது.

மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.

தமிழகம் முழுக்க இந்த வழக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை திமுக தற்போது கையில் எடுத்து இருக்கிறது.

இந்த நிலையில் கனிமொழி தலைமையில் இன்று பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கிறது.

திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது துவங்கி உள்ளது.

5 மணிக்கு தொடங்கிய போராட்டத்தில் திமுக தொண்டர்கள் கலந்து கொள்ள துவங்கி இருக்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லோரும் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் நூற்றுக்கணக்கில் இந்த போராட்டத்தில் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது போராட்டம் நடத்த கூடாது,

போராட்டம் காரணமாக பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று போலீஸ் அனுமதி மறுத்து இருந்தது. ஆனால் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கனிமொழி உள்பட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.