மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சியில் பேரணி..!

மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சியில் பேரணி..!
Advertisement
Advertisement

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சியில் பேரணி..!

தமிழகம் முழ்வதும் பேசப்பட்டும் வரும் இந்த வழக்கு சிபிஐ  வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்தது ஆனால் காவல் துறை அனுமதி அளிக்காததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் வேளையில்,

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக  கவிஞர் சினேகன் தலைமையில் பெரும் திரளான பெண்களுடன்  பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ள  நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பெருமளவிலான பெண்கள் ஆவேசக் கோஷமிட்டபடி பொள்ளாச்சியில் ஊர்வலமாக செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.