பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புள்ளவரின் பாரை அடித்து நொறுக்கிய மக்கள்…!

0
142
பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புள்ளவரின் பாரை அடித்து நொறுக்கிய மக்கள்...!
Advertisement
Advertisement

“பொள்ளாச்சி ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதாகி,

ஜாமீனில் வெளிவந்திருக்கும் அ.தி.மு.க பிரமுகர்  `பார்’ நாகராஜனுக்குச் சொந்தமான ‘பார்’ பொதுமக்களால் அடித்து நொக்கப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது”

பொள்ளாச்சியில் கல்லூரிப் பெண்களை காதல் என்ற போர்வையில் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி,

ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தமிழக மக்களை  பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில்,

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக போலீஸ் விசாரித்துக்கொண்டிருந்த இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

இதில், அரசியல் புள்ளிகளின் தொடர்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.