மணல் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து லாரிகள் பறிமுதல்..!

மணல் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து லாரிகள் பறிமுதல்..!
Advertisement
Advertisement

திருப்பத்தூர் அருகே காக்கங்கரை கிராமத்தில் மணல் கடத்த பயன்படுத்திய ஐந்து லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.மணல் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து லாரிகள் பறிமுதல்..!

வேலூர் மாவட்டம் காக்கங்கரை மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட போலி எம்.சாண்ட் எனப்படும் மணல் தயாரிக்கும் தொட்டிகளை காவல்துறையினர் உடைத்து அந்த குவாரிகளை மூடினார்கள்.

இந்த நிலையில் தொடர்ந்து மணல் கொள்ளையடிக்கப்பட்டு வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவுக்கு கடத்தப்பட்டு வந்தது.

நேற்றும் இதே போல் மணல் கடத்த பயன்படுத்திய ஐந்து லாரிகளை கந்திலி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.