புதுச்சேரியில் தொடங்கிய பா.ம.க பொதுக்குழு கூட்டம்..!

0
104
புதுச்சேரியில் தொடங்கிய பா.ம.க பொதுக்குழு கூட்டம்..!
Advertisement
Advertisement

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று கூடியுள்ளது. புதுச்சேரியில் தொடங்கிய பா.ம.க பொதுக்குழு கூட்டம்..!

வரும் லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து இன்று புதுச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் அவசர பொதுக்குழு கூட்டத்திற்கு பாமக தலைமை அழைப்பு விடுத்திருந்தது.

இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், மூத்த தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்று உள்ளனர்.

அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் வியூகம் தொடர்பாக தொடர்ச்சியாக ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றது.

பாமகவின், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மாநகர பகுதி மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

பிற கட்சிகளைவிடவும் பாமக தேர்தல் பணிகளில் துரிதம் காட்ட தொடங்கிவிட்டதால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.